மனிதர்களுக்கு மிகுந்த கேடு விளைவித்த ஆண்டு 536

ஆறு இன அழிப்பு நிகழ்வுகள் (mass extinctions) போன்ற பல கெட்ட சூழ்நிலைகளை நமது பூமி கடந்து சென்று இருக்கிறது. பூமி அவ்வப்போது சந்திக்கும் பேரிடர்களில் ஒன்று எரிமலைச்சீற்றம் ஆகும். டைசோசர்களை ஒட்டு மொத்தமாக அழித்த சிறுகோள் தாக்குதலுக்கு சற்று முன் இந்தியாவில் ஒரு எரிமலை வெடித்ததாக விஞ்ஞானிகள் அண்மையில் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அந்த எரிமலை மிகுதியான கார்பன்-டை-ஆக்சைடு காற்றை வெளியிட்டு, வளிமண்டலத்தின் வெப்பத்தை அதிகரித்தது. மிகப் பெரிய அளவில் ஏற்பட்ட அந்த எரிமலைச்சீற்றத்தால் பல உயிரினங்கள் அழிந்தன. இப்போது ஒரு வரலாற்று ஆசிரியரும்சில விஞ்ஞானிகளும் 536 ஆம் ஆண்டு தான் மனிதர்களுக்கு மிகுந்த கேடு விளைவித்த ஆண்டு என்பதை கண்டுபிடித்து இருக்கிறார்கள்

எரிமலை சீற்றம்
(எரிமலைச்சீற்றம். புகைப்பட உதவி: Doctor-a, Pixabay)

அறிவியல் ஆய்வு பத்திரிக்கையான Science எவ்வாறு 536 ஆம் ஆண்டு மிகுந்த கேடு விளைவித்த ஆண்டு என்று கருதப்படுகிறது என்பதைப் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. 536 ஆம் ஆண்டில் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் சீனா உள்ளிட்ட சில ஆசிய பகுதிகளை பதினெட்டு மாதங்களாக மூடுபனி மறைத்து இருந்தது. 1.5°முதல் 2.5°வரை வெப்பமும் குறைந்துகடந்த 2300 ஆண்டுகளில் மிக குளிர்ந்த தசாப்தத்தை உருவாக்கியது. அதோடு பனி பொழிவும் விவசாயத்தை மிகவும் பாதித்தது. அந்த மூடுபனி நிகழ்வுக்கு ஐஸ்லாந்து நாட்டில் இருந்த ஒரு எரிமலை வெடித்ததே காரணம் என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள். சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ்அண்டார்ட்டிக்கா மற்றும் கிரீன்லாந்தில் இருந்து எடுக்கப்பட்ட பனிக்கட்டி உள்ளகத்தையும் (ice core), சுவிட்சர்லாந்தின் பனியாறு (glacier) ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட பனிக்கட்டியையும் ஆராய்ந்துஐஸ்லாந்து எரிமலை வெடிப்பை உறுதி செய்து இருக்கிறார்கள். ஐஸ்லாந்து எரிமலையில் இருந்து வெளிவந்துபனிக்கட்டிகளில் தங்கிய வேதியல் பொருட்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து இருக்கிறார்கள். 

எரிமலை சீற்றம்
(சாம்பலை வெளியிடும் எரிமலை. புகைப்பட உதவி: Pexels, Pixabay)

பொதுவாக எரிமலை குழம்பு குளிரும் போது கண்ணாடி போல் ஆகிவிடும். சுவிட்சர்லாந்து மற்றும் கிரீன்லாந்தில் இருந்து எடுக்கப்பட்ட எரிமலை கண்ணாடி துகள்களை எக்ஸ் கதிரை பயன்படுத்தி விஞ்ஞானிகள் ஆராய்ந்தார்கள். அந்த எரிமலை கண்ணாடி துகள்களில் இருந்த வேதியல் தனிமங்களும்ஐஸ்லாந்து எரிமலை கற்களில் இருந்த வேதியல் தனிமங்களும் ஒன்றாகவே இருந்தது. இதன் மூலம்ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பில் இருந்து வெளி வந்த வேதியல் தனிமங்கள் பிற ஐரோப்பிய பகுதிகளில் பரவி இருந்ததை இந்த ஆய்வு உறுதி செய்கிறது. வழக்கமாகஎரிமலை வெடிக்கும் போது, அதில் இருந்து கந்தகம் (Sulphur), பிசுமத் (bismuth) போன்ற வேதியல் தனிமங்கள் வெளிவரும். இத்தகைய தனிமங்கள் வளிமண்டலத்தில் இருக்கும் ஈரப்பதத்தில் அடைப்பட்டுகதிரவனின் ஒளியை பூமிக்கு எதிர் திசையில் பிரதிபலிக்கும். இதனால் பூமிக்கு வரும் கதிரவனின் ஒளி குறைந்து பூமியின் வெப்ப நிலையும் குறைந்துவிடும். 536 ஆம் ஆண்டின் எரிமலை வெடிப்பிற்கு பின் 540 மற்றும் 547 ஆண்டுகளிலும் இரண்டு எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டதாக மேலும் சில ஆய்வுகள் கூறுகின்றன. இந்த எரிமலைகளின் வெடிப்புகளும், 541 ஆம் ஆண்டு பரவிய பிளேக் நோயும் 640 ஆம் ஆண்டு வரை ஐரோப்பாவில் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தியதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். 

நல்ல வேளையாக இன்னும் பனியாறுகளும்துருவ பனிகட்டிகளும் இருக்கின்றன. அவற்றை வைத்து இத்தகைய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம். தட்பவெப்ப நிலை மாற்றத்தால் இந்த பனிகள் எல்லாம் உருகிவிட்டால்நம்மால் இது போன்ற அறிய ஆராய்ச்சிகளை இனி மேற்கொள்ள முடியாது. 

Comments