பிலடெல்பியா அருங்காட்சியகத்திலிருந்து 7000 பூச்சிகள் திருட்டு

அமெரிக்க நகரமான பிலடெல்பியாவில் இருக்கும் ‘Philadelphia Insectarium and Butterfly Pavilion’ பூச்சிகள் அருங்காட்சியகத்தில் இருந்து ஆக்ஸ்ட் 22ஆம் தேதி ஏழாயிரம் பூச்சிகள் திருடப்பட்டுள்ளன.  இந்த பூச்சிகள் அருங்காட்சியகம் 1992ல் தொடங்கப்பட்டு2017ல் விரிவுபடுத்தப்பட்டது. அங்குஇரண்டு தளங்களில் பல வகையான பூச்சிகள் மற்றும் வெப்ப மண்டலத்தில் வளரும் செடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. அதோடு, அங்கு இரண்டு ஆயிரம் பட்டாம்பூச்சிகளும் இருக்கின்றன. அருங்காட்சியகத்தில் இருந்த எண்பது முதல் தொண்ணூறு சதவிகத பூச்சிகளை திருடர்கள் திருடி இருக்கிறார்கள். அவற்றில் பூச்சிகள்,பல்லிகள்தேள்கள்கரப்பான் பூச்சிகள்டாராண்டுலா சிலந்திகள்மரவட்டைகள் மற்றும் பல ஊர்வனங்கள் அடங்கும். இது வரலாற்றிலேயே ஒரு விசித்திரமான திருட்டு. தவிரபொது மக்களுக்கும், அருங்காட்சியகத்திற்கும் இது ஒரு துயரமான செய்தி. 

7000 பூச்சிகள் திருட்டு - பிலடெல்பியா
(பட்டாம்பூச்சிகள். பட உதவி: Gellinger, Pixabay)

அருங்காட்சியகத்தில் வேலை செய்பவர்களே இந்த திருட்டை செய்திருப்பதாக அருங்காட்சியகத்தின் முதன்மை செயல் அலுவலரும், காவலர்களும் கருதுகிறார்கள். ஐந்து பேர் பூச்சிகளை ப்ளாஸ்டிக் பெட்டிகளில் வைத்து திருடியதை அருங்காட்சியக பாதுகாப்பு கேமராக்கள் படம் பிடித்து இருக்கின்றன. ஐயத்திற்கு உரியவர்களை காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள். பூச்சிகள் பற்றிய ஆவண கோப்புகளையும் திருடர்கள் திருடி இருக்கிறார்கள். அதனால்எந்தெந்த பூச்சிகள் திருடப்பட்டு இருக்கிறது என்று தெரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. பூச்சிகள் சிறிதாக இருப்பதால் அவற்றை மறைத்து வைக்கவோ, கடத்திச் செல்லவோ எளிதாக இருக்கும். திருடப்பட்டுள்ள பூச்சிகளின் மதிப்பு $50,000 என்று Gizmodo இணையத் தளம் கூறுகிறது. ஆகையால்திருடர்கள் பூச்சிகளை வெளியே விற்க  முயற்சி செய்யலாம் என்று முதன்மை செயல் அலுவலரும், காவலர்களும் எதிர் பார்க்கிறார்கள். அரிய வகை பூச்சிகள்ஊர்வனவைகளைவாங்கிவீட்டில்வளர்க்கும் ஆர்வலர்கள் பலர் மேலை நாடுகளில் இருக்கிறார்கள். விசாரணையின் மூலம் சில பூச்சிகளை காவலர்கள் கைப்பற்றி இருப்பதாக நியு யார்க் டைம்ஸ் பத்திரிக்கை கூறுகிறது. ஆனால், அதிக நஞ்சுத் தன்மை உள்ள ‘ஆறு கண் மணல் சிலந்தியை’ இன்னும் கைப்பற்றவில்லை.  இத்தகைய சிலந்திகள் பொதுவாக பாலைவனங்களில் வாழும். இதன் நஞ்சு இரத்த அணுக்களை சிதைத்துஇரத்த நாளங்களில் இருந்து இரத்தத்தை கசிய வைக்கும் தன்மை கொண்டது.  

அருங்காட்சியக சீருடைகள் இரண்டை கத்தியில் குத்திஅதை அப்படியே சுவற்றிள் குத்தி விசித்திரமாக தொங்கவிட்டு போயிருக்கிறார்கள் திருடர்கள். இந்த திருட்டைப் பற்றி படிக்கும் போது பாஸ்டனில் இருக்கும் இசபெல்லா ஸ்டீவார்ட் கார்ட்னெர் அருங்காட்சியகத்தில் 1990ஆம் ஆண்டு நடந்த வரலாற்றின் மிகப் பெரிய கலைப் பொருட்கள் திருட்டு ஞாபகத்திற்கு வருகிறது. அந்த திருட்டில் $50 கோடிகள் மதிப்பு உள்ள எட்டு ஓவியங்கள்மூன்று வரைபடங்கள் மற்றும் இரண்டு கலைப் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இப்போது வரை அந்த திருட்டு தொடர்பாக யாரும் சிக்கவில்லை. திருடப்பட்ட கலைப் பொருட்களும் மீட்கப்படவில்லை. பாதுகாப்பு கேமராக்கள் பூச்சி திருடர்களை படம் பிடித்து வைத்திருப்பதனால் காவலர்கள் அவர்களை பிடித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. திருடு போன சில பூச்சிகளுக்கு பதில் புதிய பூச்சிகளை வாங்குவதற்காக GoFundMe மூலம் பணம் திரட்டும் முயற்சியை மேற்கொண்டு இருக்கிறது அருங்காட்சியகம். 

Comments