- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணைச் சேர்ந்த பொறியாளரும், காட்சிக் கலைஞருமான (visual artist) டேன் மேக்னிசு என்பவர் உடனடி கார்ட்டூன் கேமரா (Draw This) ஒன்றை உருவாக்கியிருக்கிறார். இந்த கேமரா, படம் பிடித்து வழக்கமான புகைப்படமாகத் தராமல்,அதை கார்ட்டூன் ஓவியமாக அச்சிடும். போலராய்ட் (polaroid)உடனடி கேமராவினால் ஈர்க்கப்பட்டு Draw This கேமராவை உருவாக்கி இருக்கிறார் மேக்னிசு. கார்ட்டூன் கோட்டு ஓவியமாக வரைவதற்கு, இந்தக் கேமரா கூகிளின் ‘Quick, Draw!’ தரவுத்தொகுப்பை (dataset) பயன்படுத்துகிறது.
![]() |
(உடனடி கார்ட்டூன் கேமரா. புகைப்பட உதவி: Dan Macnish) |
‘Quick, Draw!’ ஒரு செயற்கை நரம்பணுப் பிணையம் (neural network) ஆகும். இதை கூகிள் உருவாக்கியது. தனது நரம்பணுப் பிணையம் புரிந்து, அறிந்து கொள்வதற்காக பொது மக்களை கோட்டு ஓவியங்களை வரைந்து அனுப்ப சொல்லியது கூகிள். ஒன்றரை கோடி மக்களுக்கும் மேல் சேர்ந்து ஐந்து கோடி கோட்டு ஓவியங்களை வரைந்து கூகிளின் ‘Quick, Draw!’ திட்டத்திற்கு அனுப்பினர். மேக்னிசுவின் கேமரா இந்த தரவுகளைத் திரட்டித் தான் கார்ட்டூன்களை அச்சிடுகிறது. ஒரே ஒரு சிறிய மின்சுற்றுப் பலகையை (circuit board) கொண்டு உருவாக்கப்படும் கணினியான Raspberry Piயின் உதவியுடன் இந்த உடனடி கேமரா நரம்பணுப் பிணையத் தகவல்களை தேடி செயல்படுத்திருக்கிறது. கார்ட்டூன் போட்டோவை அச்சிடுவதற்கு வெப்ப அச்சுப்பொறியை (thermal printer) பயன்படுத்துகிறது இந்த கேமரா.
![]() |
(உடனடி கார்ட்டூன் கேமரா. புகைப்பட உதவி: Dan Macnish) |
மேக்னிசு இந்த கேமராவை அட்டையை வைத்து செய்திருக்கிறார். இந்த கேமரா அச்சுப்பதிக்கும் கார்ட்டூன் படங்கள் பார்ப்பதற்கு புதுமையாகவும், வேடிக்கையாகவும் இருக்கின்றன. இந்த கேமராவை நீங்களே செய்து கொள்ள முடியும். அதற்கு தேவையான தகவல்களை மேக்னிசு GitHub என்னும் இணையத் தளத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த கேமராவை செய்வதற்கு Raspberry Pi, பைத்தான் (python) என்னும் programming language, raspi கேமரா மற்றும் வெப்ப அச்சுப்பொறியும் தேவைப்படும்.
![]() |
(உடனடி கார்ட்டூன் கேமரா. புகைப்பட உதவி: Dan Macnish) |
Comments
Post a Comment