- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
நாசா தனது விண்வெளி வீரர்களை தனியார் விண்கலங்கள் மூலம் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு (ISS) அனுப்ப போகிறது. அதற்காக ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் போயிங் நிறுவனங்களின் விண்கலங்களை நாசா தேர்ந்தெடுத்து இருக்கிறது. 2011ஆம் ஆண்டு வரை விண்வெளி வீரர்களை தனது சொந்த விண்கலங்களிலேயே (Space Shuttle program) நாசா அனுப்பி வந்தது. அதன் பின் ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை ISSற்கு அனுப்பி வந்து. ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் போயிங் போன்ற தனியார் விண்வெளி நிறுவனங்கள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப இப்போது தயாராகிவிட்டார்கள். இவர்கள் மூலம் மனிதர்களையும், சரக்குகளையும் ISSற்கு அனுப்ப சோயூசைவிட குறைந்த அளவே செலவாகும். ஆதலால்,நாசா தனது வீரர்களை ISSற்கு அனுப்ப போயிங்கின் CST-100 Starliner மற்றும் ஸ்பேஸ் எக்சின் Dragon விண்கலங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறது. ஸ்பேஸ் எக்ஸ் Dragon தான் ISSற்கு சரக்குகளை கொண்டுச் சென்ற முதல் தனியார் விண்கலம்.
நாசாவின் எட்டு விண்வெளி வீரர்களும், போயிங்கின் ஒரு விண்வெளி வீரரும் இந்த தனியார் விண்கல திட்டத்தின் மூலம் (NASA’s Commercial Crew Program) விண்வெளிக்கு அனுப்ப படுவார்கள். முதலில்,ஐந்து விண்வெளி வீரர்கள் போயிங் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலங்களில் சோதனை முறையாக விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டு இருக்கிறார்கள். அந்த சோதனை முடிந்தவுடன் நான்கு விண்வெளி வீரர்கள் CST-100 Starliner மற்றும் Dragon விண்கலங்கள் மூலம் ISSற்கு அனுப்ப படுவார்கள். அவர்கள் தனியார் விண்கலங்களில் பயணம் செய்யப் போவதோடு, போயிங்கும், ஸ்பேஸ் எக்சும் புதிதாக வடிவமைத்து இருக்கும் விண்வெளி உடைகளை அணிந்தும் பயணிக்க போகிறார்கள். இது வரை நாசா உருவாக்கிய பெரிய, கனமான விண்வெளி உடையை அணிந்து தான் விண்வெளிக்கு செல்வார்கள். இந்த புதிய விண்வெளி உடைகள் விண்கலங்களுக்குள் மட்டும் அணிவது போன்று தயாரித்து இருக்கிறார்கள். விண்வெளியில் நடக்கும் போது (spacewalk) வழக்கமான பெரிய விண்வெளி உடையையே வீரர்கள் அணிய வேண்டும்.
![]() |
(போயிங் மற்றும் Space X வடிவமைத்திருக்கும் புதிய விண்வெளி உடைகள். புகைப்பட உதவி: போயிங் & SpaceX) |
போயிங் தயாரித்து இருக்கும் ‘போயிங் ப்ளூ’ (Boeing Blue) விண்வெளி உடை எடை குறைந்ததாகவும் அணிவதற்கு வசதியாகவும் இருக்கிறது. இதனால் விண்வெளி வீரர்கள் எளிதாக நகரவும், குனிந்து நிமிரவும் முடியும். வழக்கமான விண்வெளி உடையை விட இது 40 சதவிகிதம் எடை குறைவாக இருக்கிறது. உடையில் இருக்கும் துணி அடுக்குகள் விண்வெளி வீரர்களை குளிர்ச்சியாக இருக்க உதவும். நாசாவின் விண்வெளி உடைகளின் கழுத்தில் ஒரு வளையும் இருக்கும். அதில் தான் கனமான தலை கவசத்தை பொருத்துவார்கள். குளிர் காலங்களில் தலையை மறைக்கும் வண்ணம் உடுத்தப்படும் கதகதப்பு ஆடையான sweatshirtயைப் போல் போயிங் ப்ளூவை வடிவமைத்து இருக்கிறார்கள். எடை குறைந்த அதன் தலை கவசத்தை எளிதாக தலையில் பொருத்திக் கொள்ளலாம். தலை கவசத்தில் பாலிகார்பனேட்டால் (polycarbonate) செய்யப்பட்ட முகமூடியும் இருக்கிறது. இந்த உடையின் கையுறைகள் தொடுதிரைகளை இயக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதனால்,விண்வெளி வீரர்களால் எளிதாக கைக் கணினிகள் (tablet) மற்றும் பிற தொடுதிரைகளை பயன்படுத்த முடியும். சக விண்வெளி வீரர்களையும், பூமியில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையையும் தொடர்பு கொள்ளத் தேவையான காதொலிப்பானும், ஒலிவாங்கியும் (headset) தலை கவசத்திற்குள் இருக்கிறது.
![]() |
(போயிங் CST-100 Starliner மற்றும் SpaceXசின் டிராகன் விண்கலங்கள் - விக்கிப்பீடியா) |
Comments
Post a Comment