- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
ஜப்பானின் Yusaku Maezawaஎன்னும் பணக்காரர் தான் நிலவு சுற்றுலாவின் முதல் பயணி என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஈலான் மஸ்க் அறிவித்துள்ளார். 42 வயதான Maezawa, ஜப்பானின் மிகப் பெரிய இணையத் தள துணிக் கடையான Zozotownயை தொடங்கியவர். இவர் $290 கோடி டாலர்கள் மதிப்பு உடையவர். இவருடன் சேர்ந்து பயணிக்க 6 முதல் 8 கலைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர்களின் பயணக் கட்டனத்தையும் இவரே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். பயணச் சீட்டின் விலை பற்றி எதுவும் இவர்கள் தெரிவிக்கவில்லை. இந்த நிலவு பயணம் 2023ஆம் ஆண்டு நடக்கும் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.
![]() |
(SpaceXசின் BFR விண்கலம் நிலாவை சுற்றி வருவது போன்ற படத்தை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது) |
Maezawa தான் நிலாவை சுற்றி பறக்கப் போகும் முதல் தனியார் பயணி. இது வரை 24 பேர் நிலாவை சுற்றி பறந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் நாசாவின் அப்பல்லோ திட்டத்தின் மூலம் நிலாவிற்கு சென்றார்கள். அவர்களில் 12 பேர் நிலாவில் இறங்கி நடந்திருக்கிறார்கள். 6 பேர் நிலாவில் வண்டி (Lunar Roving Vehicles) ஓட்டி இருக்கிறார்கள். ஸ்பேஸ் எக்ஸ் ஒரு நம்பிக்கைக்குரிய தனியார் விண்வெளி நிறுவனம். அதை உருவாக்கி,நிர்வகித்து கொண்டிருக்கிறார் ஈலான் மஸ்க். தற்போது, இவர்கள் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு (International Space Station, ISS) சரக்குகளை கொண்டுச் சென்று கொண்டிருக்கிறார்கள். 2019ஆம் ஆண்டு நாசாவின் விண்வெளி வீரர்களை ISSக்கு கொண்டு செல்லப் போகிறார்கள். இந்த ஆண்டு (2018) பிப்ரவரி 2ஆம் தேதி ஆற்றல் வாய்ந்த பால்கன் (Falcon Heavy) ராக்கெட்டை ஏவியது ஸ்பெஸ் எக்ஸ். பால்கன் ராக்கெட்டில் மஸ்கின் விளையாட்டு காரான Tesla Roadsterயையும் இணைத்து அனுப்பினார்கள். பால்கன் ராக்கெட் பாதுகாப்பான தூரத்தில் இருந்து கதிரவனை சுற்றும்.
ஸ்பெஸ் எக்ஸ் தனது இன்னொரு மிக ஆற்றல் வாய்ந்த ராக்கெட்டான பிக் பால்கன் ராக்கெட்டை (Big Falcon Rocket, BFR) நிலவு சுற்றுலாவிற்கு பயன்படுத்தும். BFR ஒரு மேம்பட்ட, மறுபடியும் பயன்படுத்திக் கொள்ளத்தக்க ராக்கெட். செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களையும், சரக்குகளையும் கொண்டுச் செல்வதற்கு இந்த ராக்கெட்டை பயன்படுத்த திட்டம் இட்டிருக்கிறார்கள். விண்வெளி சுற்றுலா உலகிற்கு புதிது அல்ல. 2001 முதல் 2009 வரை ரஷ்யாவின் விண்வெளி கழகம் ஏழு சுற்றுலா பயணிகளை ISSக்கு கூட்டிச் சென்று இருக்கிறது. டெனிஸ் டிடோ (Dennis Tito) என்பவர் தான் ISSக்கு சென்ற முதல் விண்வெளி பயணி. மார்க் சட்டில்வொர்த் (Mark Shuttleworth) என்பவர் இரண்டாவது விண்வெளி பயணி. இவர் கணினி மென்பொருள் நிறுவனமான Canonical Ltdயை உருவாக்கி,அதன் முதன்மை செயல் அலுவலராக (CEO) இருக்கிறார். இந்த நிறுவனம் தான் பிரபலமான லினக்சு இயக்கு தளமான (operating system) உபுண்டுவை (Ubuntu) நிர்வகித்து கொண்டு இருக்கிறது. அந்த 7 விண்வெளி பயணிகளும் ரஷ்ய விண்வெளி கழகத்திற்கு பணம் செலுத்தி ISSக்கு பயணித்தார்கள்.
Comments
Post a Comment