- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
வரலாற்று உண்மைகள் எப்போதும் சுவாரசியமாக இருக்கும். கீழே உள்ள ஆறு சுவாரசியமான வரலாற்று நிகழ்வுகள் காலத்தைப் பற்றிய உங்களின் கருத்தை மறு ஆய்வு செய்யத் தூண்டும்.
1. தேநீருக்கு முன்பே உருவாக்கப்பட்ட பியர்
பியர் முதன்முதலாக 3500-3100 கிமுவில் காய்ச்சப்பட்டது. பியர் மற்றும் ஒயின் இருந்ததற்கான பழமையான சான்று ஈரானில் உள்ள Godin Tepe என்னும் தொல்பொருள் ஆய்வு தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. தேநீர் முதன்முதலில் 2737 கிமுவில் சென்னாங் (Shennong) என்னும் முனிவர் மற்றும் ஆட்சியாளரால் உருவாக்கப்பட்டதாக சீன புராணம் கூறுகிறது. தேநீரைப் பற்றிய அதிகாரப்பூர்வமான சான்று ஆன் (Han) மரபில் வந்த பேரரசர் ஜிங்கின் (Jing) சமாதியில் கண்டெடுக்கப்பட்டது. அதில் இருந்து ஆன் மரபின் பேரரசர்கள் கிமு இரண்டாம் நூற்றாண்டுகளில் தேநீரை பருகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
2. பிரெஞ்ச் புரட்சிக்கு முன்பே தங்களின் விடுதலையை அறிவித்த அமெரிக்கா (USA)
பொதுவாக மனித குல வரலாற்றில் அமெரிக்கா ஒரு புதிய நாடு என்று நினைப்போம். ஆனால் அமெரிக்கா தங்களின் விடுதலையை (the United States Declaration of Independence) ஜூலை 4, 1776 ஆம் ஆண்டிலேயே அறிவித்தது. இது பிரெஞ்ச் புரட்சிக் காலத்திற்கு (1789-1799) முன்பாக நடந்தது. மேலும் நெப்போலியன் பொனபார்ட் பிரான்சை 1804 முதல் 1814 வரை ஆண்டார்.
(அமெரிக்க விடுதலை மற்றும் பிரெஞ்ச் புரட்சியை விளக்கும் படங்கள் - விக்கிப்பீடியா)
3. நீராவி பொறிக்கு (engine) முன்பே உருவாக்கப்பட்ட இயந்திர கால்குலேட்டர்
ஆங்கிலேய கண்டுபிடிப்பாளர் தாமஸ் சேவெரி வணிக ரீதியில் நீராவியில் இயங்கும் பம்ப்பை (pump) முதன்முதலில் 1968ல் உருவாக்கினார். அதற்கு முன்பே 1642ல் பிலைசு பாசுகல் (Blaise Pascal) என்னும் பிரெஞ்ச் கணித வல்லுநர், இயற்பியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் இயந்திர கால்குலேட்டரை (Pascal’s calculator) உருவாக்கிவிட்டார்.
(பாசுகல் கால்குலேட்டர் மற்றும் நீராவி பொறி புகைப்படங்கள் - விக்கிப்பீடியா)
4. மிதி வண்டிக்கு முன்பே உருவாக்கப்பட்ட நீராவி ரயில் வண்டி
இங்கிலாந்தின் Richard Trevithick என்பவர் 1804ல் நீராவி ரயில் வண்டியை உருவாக்கினார். அதற்கு சில ஆண்டுகளுக்கு பின்பு 1819ல் தான் ஜெர்மானிய கண்டுபிடிப்பாளர் Baron Karl von Drais என்பவர் முதல் மிதிவண்டியை உருவாக்கினார். இவரின் மிதி வண்டி ‘டாண்டி குதிரை’ (Dandy horse) என்று அழைக்கப்பட்டது. இந்த வண்டியில் பெடல்கள் இருக்காது. இந்த வண்டியை ஓட்டுபவர் கால்களை தரையில் வைத்தே தள்ளிக்கொள்ள வேண்டும். ஸ்காட்லாந்தின் கொல்லரானKrikpatrick MacMillan என்பவர் முதல் இயந்திர ரீதியாக ஓடும் மிதி வண்டியை உருவாக்கினார். தற்காலத்தில் நாம் பயன்படுத்துவதைப் போன்ற மிதி வண்டியை 1885ல் ஆங்கிலேயரான J.K Starley ‘Rover Safety bicycle’ என்ற பெயரில் வடிவமைத்தார்.
(நீராவி பொறி மற்றும் மிதி வண்டி புகைப்படங்கள் - விக்கிப்பீடியா)
5. மனிதர்கள் நிலவில் இறங்கிய 16 ஆண்டுகளுக்கு முன்பு தான் அதிகாரப்பூர்வமாக எவரெசுட்டின் உச்சியை அடைந்தார்கள்
ஆதிகால மனிதர்கள் எவரெசுடை அடைந்ததற்கான எந்த சான்றும் இல்லை. 1921ல் ஜார்ஜ் மெலோரி மற்றும் கை புல்லாக் இருவரும் எவரெசுட்டில் 7,005 மீ (22,982 அடி) வரை ஏறினார்கள். பின்,1922ல் ஜார்ஜ் பிஞ்ச் 8,320 மீ (27,300 அடி) வரை எவரெசுட்டில் ஏறினார். 1924ல் கர்னல் பெலிக்ஸ் நார்டன் 8,550 மீ (28,050 அடி) வரை எவரெஸ்டில் ஏறினார். அதிகாரப் பூர்வமாக நியுசிலாந்தின் என்மண்ட் ஹில்லாரியும் நேபாலின் டென்சிங் நார்கேவும் தான் முதன் முதலில் எவரெஸ்டின் உச்சியை அடைந்தார்கள். 1953 ஆம் ஆண்டு மே 29ல் இவர்கள் எவரெசுட்டின் உச்சியைத் தொட்டு சாதனை படைத்தார்கள்.
அதற்கு பதினாறு ஆண்டுகளுக்கு பின்னர் நீல் ஆம்ஸ்ட்ராங்கும் பஸ் ஆல்ட்ரினும் ஜூலை 21ஆம் தேதி 1969ல் நிலவில் கால் வைத்தார்கள்.
(எவரசுட் சிகரம் மற்றும் நிலா - விக்கிப்பீடிய)
6. ஐரோப்பியர்கள் நியுசிலாந்தை ஆராய்வதற்கு முன்பே கலிலியோ வியாழன் கிரகத்தின் நான்கு நிலவுகளை கண்காணித்தார்
1610ல் கலிலியோ வியாழன் கிரகத்தின் நான்கு பெரிய நிலவுகளை தொலைநோக்கியின் மூலம் கண்காணித்தார். ஐயோ (Io), ஈரோப்பா (Europa), கண்ணிமேட் (Ganymede) மற்றும் காலிஸ்டோ (Callisto) என்று பின்னர் பெயரிடப்பட்ட நிலவுகளையே அவர் கண்டுபிடித்தார். அவற்றை நட்சத்திரங்கள் என்றும் குறிப்பிட்டார்.
ஏபெல் டாஸ்மேன் (Abel Tasman) என்னும் டச்சு கடல் ஆராய்ச்சியாளரும் அவரின் குழுவும் தான் நியுசிலாந்திற்கு சென்ற முதல் ஐரோப்பியர்கள். இவர்கள் 1642ஆம் ஆண்டு நியுசிலாந்தை அடைந்தனர். அதன் பிறகு 1769ஆம் ஆண்டில் தான் இங்கிலாந்தின் கடல் பயணி மற்றும் ஆய்வாளரான ஜேம்ஸ் குக் நியுசிலாந்திற்கு சென்று ஆய்வு செய்தார். ஆனால் அதற்கு நானூறு அல்லது ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே, 1250-1300 ஆண்டுகளுக்கு இடையில் பாலினேசியர்கள் நியுசாலந்தில் குடியேறி இருந்தார்கள்.





Comments
Post a Comment