- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
அனைத்து விலங்குளின் வாழ்விலும் உயிர் பிழைக்கும் (survival) திறன் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. காடுகளில் விலங்குகள் தங்களை எதிரி மற்றும் போட்டி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக் கொள்வது அவசியமாக இருக்கிறது. எதிரி விலங்குகளிடம் இருந்து ஒளிந்து கொள்ள, சில விலங்குகள் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப தங்களின் நிறத்தை மாற்றிக் கொண்டும் பிற விலங்குகளைப் போல் உருமாற்றிக் (மிமிக்ரி) கொண்டும் இருக்கின்றன. நிறத்தை மாற்றிக் கொள்வதிலும் பிற கடல் வாழ் விலங்குகளைப் போல் மிமிக்ரி செய்வதிலும் சிறந்த சான்றாக ஆக்டோபஸ் விளங்குகிறது. சில விலங்குகள் தங்களின் சுற்றுச் சூழலின் நிறத்திலேயே இருக்கும். அதனால் அவை வேட்டையாடுவதற்கும் ஒளிந்து கொள்வதற்கும் எளிதாக இருக்கும். ஆர்க்டிக் நரிகளுக்கு பனியைப் போன்ற வெண்ணிற உரோமங்கள் இருக்கும். பனி படர்ந்த இடங்களில் இரை விலங்குகளால் ஆர்க்டிக் நரிகளை எளிதாக கண்டுகொள்ள முடியாது. சில ஆந்தைகளின் நிறம் மரப்பட்டைகளின் நிறத்தைப் போல் இருக்கும். அதனால் அவ்வகை ஆந்தைகள் மரங்களில் ஒளிந்து கொள்ளும்.
(ஆர்க்டிக் நரி - விக்கிப்பீடியா)
பூச்சிகள் வாழும் காலம் குறைவாக இருக்கும். அந்த குறுகிய காலத்திற்குள் அவை உயிர் பிழைத்தும் இனப்பெருக்கம் செய்தும் வாழ வேண்டும். அந்துப்பூச்சி (moth) மற்றும் பட்டாம்பூச்சிகளின் வாழ்வு சில நிலைகளை கொண்டதாக இருக்கும். அதாவது, முட்டை, கம்பளிப் புழு மற்றும் வளர்ந்த அந்துப்பூச்சு அல்லது பட்டாம்பூச்சி போன்ற நிலைகள் இருக்கும். எல்லாம் நிலைகளிலும் உயிர் பிழைத்து இருந்தால் தான் அவற்றின் வாழ்வு முழுமை பெறும். அதற்காகவே அவைகள் பரிணாம வளர்ச்சியின் மூலம் மிமிக்ரியை உயிர் பிழைக்கும் ஒரு கருவியாக பெற்று இருக்கின்றன. பல பட்டாம்பூச்சிகளின் இறகுகளில் கண்ணைப் போன்ற தோற்றத்தைக் காணலாம். அவை பரவலாக இருக்கும் ஒரு உயிர் பிழைப்பு கருவியாகும். எடுத்துக்காட்டாக, ஆந்தை பட்டாம்பூச்சியின் இறகுகளில் ஆந்தையின் கண்களைப் போன்ற தோற்றம் இருக்கும். இறகுகளில் அதைப் பார்க்கும் பிற விலங்குகள் அது ஆந்தையின் உண்மையான கண்கள் என்று நினைத்து பட்டாம்பூச்சியை தொந்தரவு செய்யாது.
(ஆந்தை பட்டாம்பூச்சி - விக்கிப்பீடியா)
இந்த கண் வித்தையை கம்பளிப் புழுக்களில் கூடக் காணலாம். Elephant hawk (Deilephila elpenor) என்னும் அந்துப்பூச்சியின் கம்பளிப் புழுவிற்கு உடலில் கண்களைப் போன்ற தோற்றம் இருக்கும். அது வேட்டையாடும் விலங்குகளின் கண்களைப் போல் இருக்கும். அதனால் பறவைகள் இந்த கம்பளிப் புழுவை சாப்பிடாமல் தவிர்த்து விடும்.
(Elephant Hawk - விக்கிப்பீடியா)
கம்பளிப் புழுக்களின் இன்னொரு வியக்க வைக்கும் உயிர் பிழைப்பு திறன் பாம்பைப் போல் தோற்றம் (மிமிக்ரி) அளிப்பது. சில கம்பளிப் புழுக்கள் பாம்பைப் போல் மிமிக்ரி செய்வதை கண்டுபிடித்திருக்கிறார்கள். தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வாழும் great orange tip (Hebomoia glaucippe) என்னும் பட்டாம்பூச்சியின் கம்பளிப் புழு பச்சைப் பாம்பை போலவே தோற்றமளிக்கும்.
(Hebomoia glaucippe - விக்கிப்பீடியா)
Spicebush swallowtail (Pailio troilus) பட்டாம்பூச்சியின் அழகிய கம்பளிப் புழுவின் தலையின் இரு பக்கமும் கண்களைப் போன்ற தோற்றம் இருக்கும். அந்த கண்களின் தோற்றமும் தலையின் வடிவமும் பாம்பை போன்றே காட்சி அளிக்கும். அதனால் பறவைகள் இவற்றை உண்ணாது.
(Spicebush புழு - விக்கிப்பீடியா)
Hawk moth (Hemeroplanes triptolemus) கம்பளிப் புழுவின் தலை வியப்பூட்டும் வகையில் கச்சிதமாக பாம்பை போன்று இருக்கும். பாம்பின் கண்களோடு சேர்ந்து அதன் தோலைப் போன்றும் இந்தக் கம்பிளி புழு மிமிக்ரி செய்யும். இதன் மிமிக்ரி பறவைகளை மட்டும் இல்லாமல் மனிதர்களையும் அச்சுறுத்தம் வகையில் இருக்கும்.
Comments
Post a Comment