அதி பகட்டான லைக்கா M10 Edition Zagato கேமரா

ஏற்கனவே பகட்டான ஒரு கேமராவை பகட்டான கார்களை உருவாக்கும் நிறுவனத்தின் தலைவர் ஒருவர் வடிவமைத்தால் என்ன நடக்கும்அதன் விளைவுதான் அதி பகட்டான லைக்கா M10 Edition Zagato கேமரா. கேமரா தயாரிப்புக்கு பேர்போன நிறுவனமான லைக்கா 1914ஆம் ஆண்டு ஜெர்மனியில் தொடங்கப்பட்டது. இவர்கள் மிகத் தரமான rangefinder கேமராக்கள் மற்றும் லென்ஸ்கள் உருவாக்குவதற்கு புகழ்பெற்றவர்கள். இவர்களின் சிறப்பான ‘M’ வரிசை கேமராக்கள் முதன்முறையாக 1954ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது முதல்ஜெர்மானியர்களின் கைத்திறனுக்கு சான்றாக விளங்கும் நிறுவனங்களில் ஒன்றாக லைக்கா இருந்து வருகிறது.

லைக்கா M10
(லைக்கா M10)

மற்ற பிரபல நிறுவன கேமராக்களைவிட லைக்காவின் ‘M’ வரிசை கேமராக்களின் விலை அதிகமாக இருக்கும். நியு யார்க்கில் இருக்கும் பிரபல கேமரா கடையான B&Hன் விலை பட்டியலின் படிலைக்கா M10 கேமரா உடலின் (லென்ஸ் இல்லாமல்) விலை $7295. கெனான் தொழில்முறை கலைஞர்களுக்காக விற்பனை செய்யும் EOS1-D Mark II DSLR கேமரா உடலின் விலை $5499. அது போல்அம்சங்களை பொருத்து லைக்கா லென்ஸ்களின் விலையும் அதிகமாக இருக்கும். லைக்கா Summilux 50mm f1.4 லென்ஸின் விலை $3995. லைக்கா APO-Summicron50mm f/2 லென்ஸின் விலை $7995. கெனானின் தொழில்முறையாக பயன்படுத்தக்கூடிய தரத்தில் வரும் EF 50mm f/1.2L லென்ஸின் விலை வெறும் $1299 தான்நீங்கள் லைக்காவின் கேமரா அமைப்பை பயன்படுத்த விரும்பினால் அதிகம் பணம் செலவு செய்ய வேண்டும்.  

லைக்கா M10
(லைக்கா M10)

லைக்கா லென்ஸ்களின் தரம் மிகச் சிறப்பாக இருக்கும். Rangefinder கேமராவாக இருப்பதால்லைக்காவின் ‘M’ வரிசை கேமராக்கள் கைக்கு அடக்கமாகவும், DSLR கேமராக்களை விட எடை குறைந்ததாகவும் இருக்கும். Henri Cartier-Bresson போன்ற வரலாற்றில் முத்திரை பதித்த புகைப்படக் கலைஞர்கள் லைக்கா கேமராக்களை பயன்படுத்தித்தான் 20ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பல புகைப்படங்களை எடுத்தார்கள். அதனால் தான் விலை அதிகமாக இருந்தாலும் லைக்காவின் கேமராக்கள் இன்றும் பிரபலமாக இருக்கின்றன. 

இப்போது லைக்கா நிறுவனம் அதி பகட்டானஅழகான லைக்கா M10 Edition Zagato கேமராவை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த கேமராவை பிரபலமான வாகன வடிவமைப்பு நிறுவனமான Zagatoவின் தலைவர் Andrea Zagato வடிவமைத்திருக்கிறார். Zagato நிறுவனம் இத்தாலியில் 1919ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவர்கள் ஆஸ்டன் மார்ட்டின்பெண்ட்லிபெராரி மற்றும் ஆல்பா ரோமியோ போன்ற நிறுவனங்களுக்கு வரையறுக்கப்பட்ட பதிப்பு (limited edition) கார்களை தயாரித்து கொடுக்கிறார்கள். கார் கட்டுமானத்தில் அலுமினியத்தை பயன்படுத்துவதற்காக இவர்கள் கொண்டாடப்படுகிறார்கள்.

லைக்கா M10
(லைக்கா M10)

பொதுவாகலைக்கா கேமராக்கள் தோலால் சுற்றப்பட்டிருக்கும். அதனால் கேமராவை பிடிப்பதற்கு வசதியாக இருப்பதோடுபார்ப்பதற்கு பகட்டான தோற்றத்தையும் கொடுக்கும். ஆனால், M10 Edition Zagato கேமராவின் வெளிப்புறம் முழுவதும் அலுமினியத்தால் செய்யப்பட்டு இருக்கிறது. கேமராவை சுற்றிலும் செங்குத்தான கோடுகள் இருக்குமாறு கேமராவை வடிவமைத்து இருக்கிறார் Zagato. அந்த கோடுகளுக்கு இடையே பள்ளங்கள் இருப்பதால் கேமராவை பிடிப்பதற்கு வசதியாக இருக்கும். வழக்கமாக, M வரிசை கேமராக்களில் லென்ஸை பொருத்தும் இடத்திற்கு மேல் லைக்காவின் சிவப்பு நிற முத்திரை இருக்கும். M10 Edition Zagato கேமராவில் அந்த முத்திரை,அலுமினிய வடிவமைக்கு ஏற்றவாறு,சாம்பல் நிறத்தில் உள்ளது. இந்த கேமராவில் புகைப்படம் எடுக்க உதவும் பட்டன் (shutter button) பளபளப்பான சிவப்பு நிறத்தில் இருக்கிறது. 

M10 Edition Zagato கேமரா வியப்பூட்டும் வகையில் அழகாக பளிச்சென்று இருக்கிறது. இந்த கேமரா கொசகொச என்று இல்லாமல் குறைந்தபட்ச அளவில் (minimalistic) சுத்தமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கேமராவின் பின்னால் இருக்கும் கட்டுப்பாட்டு பட்டன்கள் (control buttons) பார்ப்பதற்கு எளிமையாகவும் நேர்த்தியாகவும் இருக்கின்றன. இந்த கேமரா CMOS 24 x 36mm சென்சார், ISO range 100 - 50,000, SD/SDHC/SDXC கார்டுகள்மூன்று அங்குல வண்ணTFT LCD திரை போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. வரையறுக்கப்பட்ட பதிப்பு என்பதால் 250 கேமராக்கள் மட்டும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை $21,600. இந்திய ரூபாயின் மதிப்பின் படி 14,76,090 ரூபாய். 

லைக்கா M10
(லைக்கா M10)

லைக்காவின் கேமராக்களும் லென்ஸ்களும் விலை அதிகமாக இருந்தாலும்பல புகைப்படக் கலைஞர்களுக்கும் புகைப்பட ஆர்வலர்களுக்கும் ஒரு பழைய லைக்கா கேமராவாவது வாங்கிவிட வேண்டும் என்ற கனவு இருக்கும்.

Comments