வரலாற்றில் சிறந்த 15 திரைப்பட பின்னணி இசை

திரைப்படங்களின் தரத்தை பின்னணி இசை விரிவுபடுத்தவும் உயர்த்தவும் செய்கின்றன. வரலாற்றில் முத்திரை பதித்த 15 திரைப்பட பின்னணி இசைகளைப் பற்றி இங்கு காண்போம். பின்னணி இசைகளின் பிரபல தன்மையையும்தனிப்பட்ட விருப்பத்தையும் கொண்டு இந்த பட்டியல் உருவாக்கப்பட்டிருக்கிறது. 

சிறந்த பின்னணி இசை
(பியானோ. பட உதவி: Stevepb, Pixabay)

1. Star Wars: Episode VI New Hope
ஜான் வில்லியம்ஸ் இசை அமைத்த பின்னணி இசைகளை கொண்டு மட்டுமே இந்த பட்டியலை நிரப்பிவிடலாம். அந்த அளவிற்கு பல முத்திரை பதித்த பின்னணி இசைகளை தன் வாழ்நாள் முழுவதும் உருவாக்கி இருக்கிறார் வில்லியம்ஸ். ஆனால்,ஸ்டார் வார்ஸ் படங்களின் தலைப்பு இசை (theme music) அவர் இசை அமைத்ததிலேயே மிகச் சிறந்தது. அது போல் ஸ்டார் வார்ஸ் படத்தில் வரும் ‘Binary Sunset’ இசையும் கூட சிறப்பாகவும், உணர்ச்சிகரமாகவும் இருக்கும். 
2. The Good, the Bad and the Ugly
‘A Fistful of Dollars’ படத்தை மிக குறைந்த பொருட் செலவில் எடுத்தார் இயக்குனர் செர்சியோ லியோனி. அதற்கு ஏற்றவாறுஇசை அமைப்பாளர் என்னியோ மோரிக்கோனேவும் அந்த படத்திற்கு குறைந்த அளவிலான இசைக் கருவிகளை வைத்து இசை அமைத்தார். இருந்தாலும் அந்த படத்தின் இசை சிறப்பாக இருக்கும். மோரிக்கோனேவின் இசை A Fistful of Dollars படத்தில் இருந்து பரிணாமித்து The Good, the Bad and the Ugly படத்தின் இசையாக வளர்ந்தது. உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும்மக்கள் இந்த படத்தின் தலைப்பு இசையை அடையாளம் கண்டு கொள்வார்கள். இந்த படத்தில் வரும் ‘The Ecstasy of the Gold’ இசை மோரிக்கோனே இசை அமைத்ததிலேயே மிகச் சிறந்து என்று பல ரசிகர்களும், விமர்சகர்களும் கருதுகிறார்கள். 
3. James Bond Theme Music
ஜேம்ஸ் பாண்ட் படங்களின் தலைப்பு இசை பரவலாக அடையாளம் கண்டுகொள்ளப்படும் சிறந்த பின்னணி இசை. இதை உருவாக்கியவர் ஆங்கிலேய திரைப்பட இசை அமைப்பாளர் Monty Norman. முதல் ஜேம்ஸ் பாண்ட் படமான Dr. Noவில் (1962) இருந்த இந்த இசை அனைத்து ஜேம்ஸ் பாடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
4. The Godfather
ஏற்கனவே சிறப்பாக இருக்கும் The Godfather படத்தை இசை அமைப்பாளர் Nino Rotaவின் இசை மேலும் மெருகூட்டுகிறது. இந்த படத்தில் திரைக்கதையும், ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கும். அதோடுபடக் கதையின் அழுத்தத்தையும் உணர்ச்சியையும் கூட்டும் வகையில் ரோடாவின் இசை இருக்கும். 
5. Psycho 
சில இயக்குனர்கள் மற்றும் இசை அமைப்பாளர்களின் வெற்றிகரமான கூட்டணிகள் பிரபலமானவை. ஸ்டீவன் ஸ்பீல்பர்க் மற்றும் ஜான் வில்லியம்சின் வெற்றி கூட்டணி பற்றி அறிந்திருப்பீர்கள். அது போல் அண்மையில் கிரிஸ்டோபர் நோலன் மற்றும் ஹன்ஸ் சிம்மரின் கூட்டணியும் பிரபலமானதே. இவர்களுக்கு எல்லாம் முன்னால் Alfred Hitchcock மற்றும் Bernard Herrmann கூட்டணி வெற்றிகரமாக இருந்தது. இவர்கள் இருவரும் அவர்களின் துறைகளில் வரலாறு படைத்தவர்கள். ஹிட்ச்காக்கின் Vertigo, North by Northwest மற்றும் Psycho படங்களுக்கு ஹெர்மான் இசை அமைத்து இருக்கிறார். அந்த படங்களில் Psycho படத்தின் இசை மிக சிறப்பாக இருக்கும். அந்த படத்தில் வரும் குளியல் அறைக் காட்சி திரைப்பட வரலாற்றிலேயே பிரபலமான காட்சிகளில் ஒன்றாகும். ஹிட்ச்காக் தொடக்கத்தில் அந்த காட்சிக்கு பின்னணி இசையை சேர்க்க வேண்டாம் என்று எண்ணி இருந்தார். ஆனால்,அந்த காட்சிக்கு இசை இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று ஹிட்ச்காக்கிற்கு உணர்த்தினார் ஹெர்மான். அந்த காட்சியை இசை இல்லாமலும்இசையோடும் ஹிட்ச்காக்கிற்கு போட்டு காட்டிகாட்சிக்கு இசை எவ்வளவு தேவை என்பதை உணர்த்தினார் ஹெர்மான். மற்றவை வரலாறு. 
6. Raider of the Lost Ark
ஸ்பீல்பெர்க்கின் வீர தீர பட வரிசையான Indiana Jones படங்களில் ஜான் வில்லியம்சின் அழகான பின்னணி இசை இருக்கும். இந்த படங்களின் தலைப்பு இசை கதாநாயகனின் வீரம்,துணிச்சலுக்கு ஏற்றவாறு இருக்கும். Raiders of the Lost Ark படத்தின் இசை ஸ்டார் வார்ஸ் படங்களின் பாணியில் இருக்கும். இந்த படத்தின் இசையை கேட்கும் போது பல இடங்களில் ஸ்டார் வார்ஸ் படங்களின் இசையை நினைவு படுத்தும். ஆனால், ‘Indiana Jones and the Last Crusade’ படத்தின் இசை தனித்துவமாக இருக்கும். 
7. The Lord of the Rings
ஒரு படத் தொடருக்கு இசை அமைத்ததிலேயே வரலாற்றில் இடம் பிடித்தார் கனடா நாட்டு இசை அமைப்பாளரான Howard Shore. The Lord of the Rings படங்களைப் போல அதன் இசையும் சிறப்பாக இருக்கும். படத் தயாரிப்பு,கிராபிக்ஸ் (CGI) மற்றும் இசைக்கு ஒரு அளவுகோளாக The Lord of the Rings படங்கள் விளங்குகின்றன. இந்த படங்களில் வரும் பின்னணி இசைகள் அழகாகவும் (Concerning Hobbits & Many Meetings)வீர (The Bridge of Khazad Dum & A Knife in the Dark)தீரத்தை (The Black Rider) எடுத்துக்காட்டுவதாகவும் இருக்கின்றன.  மேலும்இந்த படத்திற்காக  அமைக்கப்பட்ட பாடல்கள் மிக அழகாகவும், உணர்ச்சிகரமாகவும் இருக்கும் (May It be, Evenstar and Gollum’s Song)The Lord of the Rings படங்களின் இசையின் சிறப்பை பற்றி ஒன்றுஇரண்டு நூல்களே எழுதலாம். 
8. Schindler’s List
Schindler’s List ஒரு உணர்ச்சிகரமான திரைப்படம். படக் கதையின் உணர்வுகளை எடுத்துக்காட்டுவது போல் மிக பொருத்தமாக இசை அமைத்து இருப்பார் ஜான் வில்லியம்ஸ். இந்த படத்தின் இசையை எப்போது கேட்டாலும் அந்த கொடுமையான காலத்திற்கே நம்மை கொண்டு செல்வது போல் இருக்கும். இந்த படத்தின் இசை மனதில் ஒருவித வலியை உணர்த்தும் விதமாக இருக்கும். 
9. Jurassic Park 
ஜுராசிக் பார்க் படத்தின் பின்னணி இசை ஜான் வில்லியம்சின் மற்றுமொரு முத்திரை பதித்த, தலைசிறந்த இசையாகும். இந்தப் படத்தை எடுத்ததன் மூலம் blockbuster படங்களை மறுவரையறை செய்தார் ஸ்பீல்பர்க். கிராபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்தியதில் இந்த படம் ஒரு மைல் கல்லாகும். ஜுராசிக் பார்க்கின் பின்னணி இசை அழகாகவும்,வீர தீரமாகவும் மற்றும் படத்தின் தரத்தை உயர்த்துவதாகவும் இருக்கும். 
10. Back to the Future
இயக்குனர் ராபர்ட் செமெக்கிசு (Robert Zemeckis) மற்றும் இசை அமைப்பாளர் ஆலன் சில்வெஸ்ட்ரியின் (Alan Silvestri) கூட்டணி தனித்துவமாக இருக்கும். செமெக்கிஸ் வேறுபட்ட நல்ல படங்களை இயக்கி இருக்கிறார். அந்தப் படங்களுக்கு இசை அமைத்தவர் சில்வெஸ்ட்ரி. இவர்களின் கூட்டணியில் Back to the Future படங்கள் சிறப்பாக இருக்கும். நல்லுணர்ச்சியை (feel-good) ஏற்படுத்தும் சிறந்த தொடர் படங்களில் Back to the Future பட வரிசையும் ஒன்று. இந்த படங்களின் பின்னணி இசை வீர தீரத்துடன்பரவலாக அடையாளம் கொள்ளும் வகையில் இருக்கும். 
11. Mission Impossible
1966ல் நாடகங்களாக Mission Impossible உருவாக்கப்பட்டது. ஜேம்ஸ் பாண்ட் படங்களின் தலைப்பு இசையைப் போல Mission Impossibleலின் தலைப்பு இசையும் பிரபலமானது. இதை அர்ஜெண்டினா நாட்டு இசை அமைப்பாளர் Lalo Schifrin உருவாக்கினார். 1996ல் Mission Impossibleலை திரைப்படமாக எடுத்தார் மற்றொரு தனித்துவமான இயக்குனரான Brain De Palma. அப்போது இருந்து ஜேம்ஸ் பாண்ட் படங்களைப் போல இந்த படங்களும் ரசிகர்களால் விரும்பபட்டு வெற்றிகரமாக இருக்கின்றன. இசை அமைப்பாளர்களான Danny Elfman மற்றும் Michael Giacchino போன்றோர்கள் தொன்மை மரபாக அசலான தலைப்பு இசையை Mission Impossible படங்களில் பயன்படுத்தி வருகிறார்கள். 
12. Jaws
ஸ்பீல்பர்க் இயக்கிய Jaws (1975) படம் தான் முதல் blockbuster படமாகும். அந்த படத்திற்காக இயந்திர சுறாவை வைத்து படம்பிடிக்க சிரமபட்டார் ஸ்பீல்பர்க். ஹிட்ச்காக்அவருடைய படங்களில் பயன்படுத்திய நுட்பங்களால் கவரப்பட்டவர் ஸ்பீல்பர்க். அத்தகைய நுட்பங்களை Jaws படங்களில் பயன்படுத்திக் கொண்டார். குறிப்பாக,சுறாவை நேரடியாக காட்டாமல்பல காட்சிகளை சுறாவின் பார்வையில் (Point of View, POV) எடுத்தார். அந்த பாணி சரியாக வேலை செய்தது. அந்த காட்சிகள் படம் பார்ப்பவர்களுக்கு பதற்றத்தையும் திகிலையும் கூட்டின. அதோடு ஜான் வில்லியம்சின் இசை மேலும் திகிலை அதிகப்படுத்தியது. Jaws படத்தின் இசை Psycho பட இசையின் பாணியில் இருக்கும். படத்தின் இசையை மட்டும் கேட்டாலே அந்த பதற்றத்தை நாம் உணரலாம். 
13. Once Upon a Time in the West
லியோனியின் டாலர் முப்படங்களில் (Dollar Trilogy) இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தது போல் Once Upon a Time in the West படம் இருக்கும். பல விமர்சகர்களும்ரசிகர்களும் இந்த படத்தை சிறந்த western (கௌபாய்) படம் என்று கருதுகிறார்கள். இந்த படத்தில் மோரிக்கோனேவின் இசை பிரமாண்டமாகவும்அழுத்தமாகவும் உணர்ச்சிகரமாகவும் இருக்கும். டாலர் முப்படங்கள் மற்றும் Once Upon a Time in the West படங்களின் கடைசி காட்சி மிகவும் உணர்வு பூர்வமாகவும் அதிரடியாகவும் இருக்கும். லியோனி தன் படங்களில் இசைக்கு மிகவும் முன்னுரிமை கொடுப்பார். படக்காட்சிகளை இசையை அடிப்படையாக வைத்து படம் பிடிப்பார். அதனால்அவருடைய படக் காட்சிகள் நீளமாகவும் மெதுவாகவும் நகரும். இது காட்சிகளில் பதற்றத்தை அதிகரிக்க தேவையான நேரத்தை கொடுக்கும். லியோனி படங்களின் இத்தகைய பண்புகளுக்கு முதன்மை எடுத்துக்காட்டாக Once Upon a Time in the West விளங்குகிறது.  படத்தில் கதாநாயகனான Harmonicaவிற்கான இசை மர்மம் நிறைந்ததாக இருக்கும். மற்றொரு கதாபாத்திரமான Cheyenneனிற்கான இசை விளையாடுத்தனமாக இருக்கும். இந்த படத்தின் கடைசி காட்சியின் இசை உணர்வு பூர்வமாகவும்எழுச்சி பூர்வமாகவும் இருக்கும். 
14. The Magnificent Seven 
The Magnificent Seven ஒரு பிரபலமான western வகை படமாகும். அமெரிக்க இசை அமைப்பாளரான Elmer Bernstein இந்த படத்திற்கு இசை அமைத்தார்.  படத்தின் வீர தீரமான தலைப்பு இசை தலைசிறந்த இசைகளில் ஒன்றாகும். 
15. Pirates of the Caribbean: The Curse of the Black Pearl
Pirates of the Caribbean படத்தின் பின்னணி இசைகுறிப்பாக தலைப்பு இசையான ‘He’s a Pirate’ புதிய தலைசிறந்த இசையாகும். இந்த படத்திற்கு இசை அமைப்பதற்கான வாய்ப்பு கடைசி நேரத்தில் ஹன்ஸ் சிம்மருக்கு கிடைத்தது. ஆனால்அப்போது சிம்மர் மற்றொரு படத்தின் பணியில் மும்முரமாக இருந்தார். இருந்தாலும் இந்த படத்திற்கு சில இசைகளை எழுதினார். பின்,தனது சக இசை அமைப்பாளரான Klaus Badeltயை மீதமுள்ள இசையை அமைக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த படத்தின் இசையை வீர தீரமும் விளையாட்டுத்தனமும் கலந்ததாக இருக்கும். இது கதையின் நாயகனான Jack Sparrowவின் செய்கைகளுக்கு நன்றாக ஈடுகொடுத்தது. 

(மேலிருக்கும் புகைப்பட உதவி: Stevepb, Pixabay)

Comments