- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Ready Player One படத்தின் வெற்றியால் $10 பில்லியன்களுக்கு (1 பில்லியன் = 100 கோடி) மேல் வசூல் செய்த படங்களை இயக்கிய முதல் இயக்குனர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார் ஸ்டீவன் ஸ்பில்பெர்க். பில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூல் செய்த படங்களை இயக்கிய பத்து முன்னணி இயக்குனர்களைப் பற்றி இங்கு காண்போம். இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் திரைப்படங்களின் வசூலை வெளியிடும் இணையத் தளமான Box Office Mojoவில் இருந்து மே 2, 2018ல் எடுக்கப்பட்டது. திரைப்படங்களுக்கான முன்னணி தரவுத் தளமான IMDb தான் Box Office Mojo தளத்தை இயக்கி கொண்டிருக்கிறது.
வரலாற்றில் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஸ்பில்பெர்க்கும் ஒருவர். இவர் இயக்கிய Jaws (1975) படம் தான் முதல் ப்ளாக் பஸ்டர் படம். ஸ்பில்பெர்க் இயக்கிய ஏழு படங்கள் IMDbயின் Top Rated 250 Movies பட்டியலில் (Jaws, Raiders of the Lost Ark, Indiana Jones and the Last Crusade, Schindler’s List, Jurassic Park, Saving Private Ryan and Catch Me If You Can) இருக்கின்றன. ஸ்பில்பெர்க்கின் 33 படங்கள் உலக அளவில் $10.4 பில்லியன்கள் (பணவீக்கத்திற்கு சரி செய்யப்பட்ட கணக்கு) அல்லது $10.08 பில்லியன்கள் (பணவீக்கத்திற்கு சரி செய்யப்படாத கணக்கு) வசூல் செய்திருக்கின்றன.
ஸ்பில்பெர்க்கின் மூன்று முன்னணி படங்கள்
1. E.T: The Extra-Terrestrial - $1,299,385,700 million
2. Jaws - $1,173,202,000 million
3. Jurassic Park - $839,255,900 million
தொடக்கத்தில் நகைச்சுவை திகில் படமான Braindeadடிற்காக (1992) அறியப்பட்டார் ஜாக்சன். மிகப் பிரபலமான கற்பனை நாவலான The Lord of the Ringsசை படங்களாக இயக்கிய பின்னர் ஜாக்சனின் நிலைமை மட்டும் இல்லாமல் ஹாலிவுட் திரைப்பட தொழிற்சாலையும் கூட மாறியது. விமர்சகர்களால் பாராட்டப்பட்ட The Lord of the Rings படங்களினால் சிறந்த இயக்குனரானார் ஜாக்சன். திரைப்படங்கள் இயக்கும் முறைகள், visual effects மற்றும் motion captureதொழில்நுட்பங்கள் போன்றவைகளுக்கு ஒரு அளவு கோலனாது இந்த படங்கள். தவிர, The Lord of the Rings திரைப்படங்கள் IMDb Top 250 பட்டியலில் உயர்ந்த இடங்களை பிடித்திருக்கின்றன (12, 16 & 7). ஜாக்சனின் ஒன்பது படங்கள் $6.5207 பில்லியன்கள் வசூல் செய்திருக்கின்றன. The Lord of the Rings and The Hobbit படங்கள் மட்டுமே $5.847 பில்லியன்கள் வசூல் செய்திருக்கின்றன.
ஜாக்சனின் மூன்று முன்னணி படங்கள்
1. The Lord of the Rings: The Return of the King - $1,119.1 million
2. The Hobbit: An Unexpected Journey - $1,021.1 million
3. The Hobbit: The Desolation of Smaug -$958.4 million
Transformers, Bad Boys மற்றும் The Rock போன்ற பொழுதுபோக்கு படங்களுக்கு பெயர்
பெற்றவர் பே. இவருடைய படங்கள் பெரிய அளவில் விமர்ச்சகர்களின் பாராட்டுகளை
பெறாவிட்டாலும் உலக அளவில் இளைஞர்களை கவரக்கூடியன. இவருடைய 13 படங்கள்
$6.4506 பில்லியன்களை வசூல் செய்திருக்கின்றன. இவர் இயக்கிய ஐந்து Transformers
படங்கள் மட்டும் $4.379 பில்லியன்களை வசூல் செய்திருக்கின்றன.
பேயின் மூன்று முன்னணி படங்கள்
1. Transformers: Dark of the Moon $1,123.8 million
2. Transformers: Age of Extinction $1,104.1 million
3. Transformers: Revenge of the Fallen $836.3 million
கேமரன் கச்சிதமாகவும் தொழில்நுட்ப ரீதியில் முன்னேறிய படங்களை எடுப்பதற்கு
பெயர்போனவர். Terminator 2: Judgment Day, Aliens, Titanic மற்றும் Avatar போன்ற
முத்திரை பதித்த படங்களை இயக்கியவர். $2 பில்லியன்களுக்கு மேல் வசூல் செய்த
இரண்டு படங்களை கொடுத்த ஒரே இயக்குனர் கேமரன். இவருடைய அவதார் படம்
குழப்பமான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், படத்தின் visual effects குறிப்பாக 3டி
தொழில்நுட்பம் சிறப்பாக இருந்தது. அவதார் $3 பில்லியன்களுக்கு $222.8 மில்லியன்கள்
($22.28 கோடிகள்) குறைவாக $2.7772 பில்லியன்களை வசூல் செய்திருக்கிறது.
கேமரனின் ஒன்பது படங்கள் $6.1389 பில்லியன்களை வசூல் செய்திருக்கின்றன.
கேமரன் புதிதாக நான்கு அவதார் படங்களை எடுத்துக் கொண்டு இருக்கிறார். அவை
நன்றாக வருமா என்று நமக்குத் தெரியாது. எடுத்தக் காரியங்களை கச்சிதமாக
செய்யக்கூடியவர் கேமரன். அதனால் அந்தப் படங்கள் ஓரளவு நன்றாக வர வாய்ப்புகள்
இருக்கின்றன. அடுத்த அவதார் படம் முழுவதும் தண்ணீருக்கு அடியில் எடுக்கப்படுவதாக
புரளிகள் வந்துள்ளன. அது உண்மையாக இருந்தால், அந்தப் படம் பலரையும்
கவரக்கூடியதாக இருக்கும். புதிய அவதார் படங்கள் நன்றாக வசூல் செய்தால், இந்தப்
பட்டியலில் கேமரன் இரண்டாவது அல்லது ஒன்றாவது இடத்திற்கு சென்றுவிடுவார்.
கேமரனின் மூன்று முன்னணி படங்கள்
1. Avatar - $2,777.2 million
2. Titanic - $2,128.9 million
3. Terminator 2: Judgement Day - $519.8 million
5. டேவிட் யேட்சு (7 படங்கள்)
பீட்டர் ஜாக்சனை போல் வெற்றிகரமான கற்பனை நாவல் ஒன்றை (Harry Potter) வைத்து
படங்களை இயக்கி பில்லியன் டாலர் இயக்குனர் ஆனவர் யேட்ஸ். யேட்ஸின் 6 படங்கள்
$5.3468 பில்லியன்களை உலக அளவில் வசூல் செய்திருக்கின்றன. அவற்றில் நான்கு Harry
Potter படங்களாகும். Harry Potter நாவல்களின் ஆசிரியரான J.K. Rowling எழுதிய
‘Fantastic Beasts and Where to Find Them’படத்தையும் இயக்கியிருக்கிறார் யேட்ஸ்.
யேட்ஸின் மூன்று முன்னணி படங்கள்
1. Harry Potter and the Deathly Hallows Part 2 - $ 1,341.5 million
2. Harry Potter and the Deathly Hallows Part 1 - $960.3 million
3. Harry Potter and the Order of the Phoenix - $939.9 million
விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் கொண்டாடப்படும் நோலன், மனம் திகைக்க வைக்கும்
படங்களை இயக்குபவர். இவர் இயக்கிய பத்து படங்களில் எட்டு படங்கள் IMDbயின் Top
250 படங்களின் பட்டியலில் இருக்கின்றன. இவர் இயக்கிய The Dark Knight படம் IMDbயின்
Top 250 பட்டியலில் நான்காம் இடத்தில் இருப்பதோடு சித்திரக் கதைகளில் இருந்து
எடுக்கப்படும் திரைப்படங்களில் ஒரு புரட்சியை உண்டாக்கி இருக்கிறது. Batman
படங்களின் மறுதுவக்கமாக (reboot) அமைந்த The Dark Knight பட வரிசைகள் பழைய
படங்களை மறுதுவக்கம் செய்யும் புதிய போக்கை ஹாலிவுட்டில் உருவாக்கியது. நோலனின்
ஒன்பது படங்கள்$4.7548 பில்லியன்களை வசூல் செய்திருக்கின்றன.
நோலனின் மூன்று முன்னணி படங்கள்
1. The Dark Knight Rises - $1,084.9 million
2. The Dark Knight - $1,003 million
3. Inception - $828.3 million
செமெக்கிசு ஒரு குறிப்பிடத்தக்க தனித்துவமான இயக்குனர். இவரின் Forrest Gump, Back
to the Future trilogy மற்றும் Contact படங்கள் விமர்சகர்களால் பாராட்டு பெற்று முத்திரை
பதித்தவை. இவர் பல வகையான (genre) படங்களை இயக்குபவர். இவரின் 16 படங்கள்
$4.2436 பில்லியன்களை வசூல் செய்திருக்கின்றன.
செமெக்கிசின் மூன்று முன்னணி படங்கள்
1. Forrest Gump - $677.4 million
2. Cast Away - $429.6 million
3. Back to the Future - $381.1million
கொலம்பசு புகழ்பெற்ற Home Alone மற்றும் இரண்டு Harry Potter (Harry Potter and the
Sorcerer’s Stone and Harry Potter and the Chamber of Secrets) படங்களை
இயக்கியவர். இவரையும் சேர்த்து Harry Potter படங்கள் இரண்டு ‘பில்லியன் டாலர்’
இயக்குனர்களை உருவாக்கி இருக்கின்றன. கொலம்பசின் 13 படங்கள் $4.0603
பில்லியன்களை வசூல் செய்திருக்கின்றன. இவரின் இரண்டு Harry Potter படங்கள் மட்டும்
$1.8538 பில்லியனை வசூல் செய்திருக்கின்றன.
கொலம்பசின் மூன்று முன்னணி படங்கள்
1. Harry Potter and the Sorcerer’s Stone - $974.8 million
2. Harry Potter and the Chamber of the Secrets - $879.0 million
3. Home Alone - $476.7 million
பர்ட்டன் Batman மற்றும் கற்பனை (fantasy) படங்களுக்கு புகழ்பெற்றவர். நோலனின் The
Dark Knight பட வரிசைகளுக்கு முன் பர்ட்டனின் மைக்கேல் கீட்டன் நடித்த பேட்மேன்
படங்கள் தான் பிரபலமாக இருந்தன. இவரின் பேட்பேன் படத்தில் ஜாக் நிக்கல்சன் நடித்த
ஜோக்கர் கதாபாத்திரம் சிறந்த திரைப்பட வில்லன்களில் ஒன்றாக பாராட்டப்படுகிறது.
பர்ட்டனின் 15 படங்கள் $3.9797 பில்லியன்களை வசூல் செய்திருக்கின்றன.
பர்ட்டனின் மூன்று முன்னணி படங்கள்
1. Alice in Wonderland - $1,025.5 million
2. Charlie and the Chocolate Factory - $475.0 million
3. Batman - $411.3 million
திரைப்பட வரலாற்றில் முத்திரை பதித்த Blade Runner, Alien, Gladiator மற்றும் Black
Hawk Down திரைப்படங்களை இயக்கிய சுகாட் ஒரு சிறந்த மற்றும் செல்வாக்கு மிக்க
இயக்குனர். இவரின் 18 படங்கள் $3.9425பில்லியன்களை வசூல் செய்திருக்கின்றன.
சுகாட்டின் மூன்று முன்னணி படங்கள்
1. The Martian - $630.2 million
2. Gladiator - $460.6 million
3. Prometheus - $403.4 million
தற்போதைய ‘பில்லியன் டாலர்’ இயக்குனர்களை விஞ்சக்கூடிய இயக்குனர்கள்:
Apollo 13 மற்றும் சுயசரிதை படங்களான A Beautiful Mind மற்றும் Frost/Nixon போன்ற சிறந்த படங்களை இயக்கியவர் ரான் காவர்ட். இவரின் 20 படங்கள் $3.8118 பில்லியன்களை வசூல் செய்திருக்கின்றன. அனைவரும் விரும்பும் ஸ்டார் வார்ஸ் கதாநாயகனான Han Soloபற்றி ‘Solo: A Star Wars Story’ என்னும் படத்தை இயக்கி,இந்த மாதம் வெளியிடுகிறார் காவர்ட். அண்மையில் வெளியான ஸ்டார் வார்ஸ் படங்கள் $1 பில்லியனுக்கும் மேல் வசூல் செய்திருக்கின்றன (Force Awakens $2.068 பில்லியன்கள், Last Jedi $1.332 பில்லியன் மற்றும் Rogue One $1.056 பில்லியன்). ‘Solo: A Star Wars Story’ படம் $1 பில்லியன் வசூல் செய்தால் கூட காவர்ட் இப்போதைக்கு வசூலில் நோலனை முந்திவிடுவார்.
ஹாவர்ட்டுக்கு அடுத்து இருப்பவர் ‘Pirates of the Caribbean’ படங்களின் இயக்குனரான கோர் வெர்பின்ஸ்கி. இவருடைய படங்கள் $3.755 பில்லியன்களை வசூல் செய்திருக்கின்றன. வசூலில் ஹாவர்ட்டிற்கு மிக அருகில் இருக்கிறார் வெர்பின்ஸ்கி.
ஆனால், காவர்டின் பெரிய போட்டியாளர் ஜெ.ஜெ. ஏப்ரம்சு தான். கேமரனுக்கு அடுத்த ‘இரண்டு பில்லியன் டாலர்’ இயக்குனர் இவர். கேமரனும் ஏப்ரம்சும் மட்டும் தான் இது வரை இரண்டு பில்லியன் டாலர்களுக்கு மேல் வசூல் செய்த படங்களை இயக்கியவர்கள். ஏப்ரம்சின் ‘Star Wars: The Force Awakens’ படம் $2.068 பில்லியன்களை வசூல் செய்தது. ஏப்ரம்சு Star Wars: Episode IX படத்தை 2020ல் வெளியிடப் போகிறார். அந்தப் படம் $2 பில்லியனுக்கு மேல் வசூல் செய்தால், ஏப்ரம்சு இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துவிடுவார்.
படத்தின் தரத்திற்கும் வசூலுக்கும் எப்போதும் தொடர்பு இருக்கிறது என்று சொல்ல முடியாது. IMDb Top 250 படங்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் மிகச் சிறந்த படமான The Shawshank Redemption உலக அளவில் வெறும் $28.3 மில்லியன்களை ($2.83 கோடிகள்) மட்டுமே வசூல் செய்தது. இந்தப் படம் எடுக்க செய்யப்பட்ட செலவே $25 மில்லியன்கள் என்று The Number இணையத் தளம் கூறுகிறது. அதே போல் முத்திரை பதித்த அறிவியல்-புனைவு படமான Blade Runner கூட $32.8 மில்லியன்களை மட்டுமே வசூல் செய்தது.
10 முன்னணி பில்லியன் டாலர் இயக்குனர்களின் பட்டியல் (சுருக்கம்)
1. ஸ்டீவன் ஸ்பில்பர்க் - $10.4 billions
2. பீட்டர் ஜாக்சன் - $6.52 billions
3. மைக்கேல் பே- $6.45 billions
4. ஜேம்சு கேமரன் - $6.13 billions
5. டேவிட் யேட்சு- $5.34 billions
6. கிரிசுடோபர் நோலன் - $4.75 billions
7. ராபர்ட் செமெக்கிசு - $4.24 billions
8. கிரிஷ் கொலம்பசு -$4.06 billions
9. டிம் பர்ட்டன்- $3.97 billions
10.ரிட்லி ஸ்கார்ட்- $3.94 billions
Comments
Post a Comment