- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
தன்னால் மறு சீரமைத்துக் கொண்டு இயங்க முடியும் என்பதை ஒரு மூளை மீண்டும் நிரூபித்துள்ளது. மூளையின் அத்தகைய தன்மையை neuroplasticity என்று அழைக்கிறார்கள். புற்று நோயின் காரணமாக ஆறு வயது சிறுவன் ஒருவன் வலிப்பு வந்து பாதிக்கப்பட்டான். அந்த நோயை குணப்படுத்துவதற்காக சிறுவனின் வலது பக்க மூளையில் இருந்து ஒரு பகுதியை மருத்துவர்கள் நீக்கினார்கள். மூளையில் காட்சிகளை செயல்படுத்தும் பகுதியான occipital lobe மற்றும் ஒலியை செயல்படுத்தவும், காட்சியை பதிவு செய்யவும் மற்றும் மொழியை புரிந்துகொள்ள உதவும் பகுதியான posterior temporal lobe ஆகிய இரு பகுதிகளைத் தான் மருத்துவர்கள் நீக்கியிருந்தார்கள்.
![]() |
(மூளை. பட உதவி: Pixabay) |
அறுவை சிகிச்சை முடிந்து 13 மற்றும் 36 மாதங்கள் கழித்து அந்த சிறுவனின் மூளையை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். முகங்கள், காட்சிகள், பொருட்கள் மற்றும் சொற்களை அந்த சிறுவனுக்கு காட்டி, அவை மூளையில் எத்தகையை எதிர்வினையை, எந்தெந்த பகுதிகளில் ஏற்படுத்துகிறது என்பதை கவனித்தார்கள். fMRI வரைவி மூலம் செய்யப்பட்ட அந்த பரிசோதனையில், சிறுவனின் மூளை தானாக மறு சீரமைத்துக் கொண்டு செயல்படுவதை உறுதி செய்திருக்கிறார்கள்.
![]() |
(மூளையின் பாகங்கள் - விக்கிமீடியா) |
சிறுவனின் பத்தாவது வயதில் செய்யப்பட்ட பரிசோதனையில், அவனது நுண்ணறிவு எண் (IQ) சராசரியை விட அதிகமாக (118) இருந்தது. பொருட்களை அடையாளம் கண்டுகொள்ளும் திறனும், காட்சிகளை உணரும் திறனும் அந்த சிறுவனுக்கு அவனது வயதுக்கு ஏற்ற வகையில் இயல்பாக இருந்தது. இந்த பரிசோதனையின் முடிவுகள், நீக்கப்பட்ட வலது பக்க மூளையின் செயல்பாடுகளை இடது பக்க மூளை எடுத்துக்கொண்டு செயல்படுவதை குறிக்கின்றது. வலது பக்க மூளையின் பகுதிகள் நீக்கப்பட்டதால், அந்த சிறுவனால் இடது பக்க காட்சிகளை பார்க்க முடியவில்லை. இன்னும் இளம் பருவத்தில் இருப்பதால், மறு சீரமைத்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டு, அந்த சிறுவனின் மூளை மேலும் முன்னேற வாய்ப்பு இருக்கின்றது. மருத்துவர்கள், அந்த சிறுவனுக்கு மேற்கொண்டு பயற்சி அளித்து, சில ஆண்டுகளுக்கு பிறகு பரிசோதனை செய்து மேலும் புதிய முன்னேற்றங்களை கண்டுபிடிப்பார்கள் என்று நினைக்கின்றேன்.
Comments
Post a Comment