- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
டிக்கின்சோனியா (Dickinsonia) என்று அழைக்கப்படும் 55.8 கோடி ஆண்டுகள் பழமையான புதைபடிவம் (fossil) விலங்கு இனத்தை சேர்ந்தது என்று ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு உறுதி செய்திருக்கிறது. இவை 57.1 – 54.1 கோடி ஆண்டுகளுக்கு முன்பு எடியாகார காலத்தில் (Ediacaran Period) வாழ்ந்தன. Ediacara biota எனப்படும் அந்த கால உயிரனங்களின் கூட்டத்தை சேர்ந்தது டிக்கின்சோனியா. இவை கடல் வாழ் உயிரினம் ஆகும். இவை 1.4 மீட்டர்கள் வரை வளரக்கூடியன. இதற்கு முன் கிடைத்த புதைபடிவங்களை வைத்து கேம்பிரியக் காலத்தில் (Cambrian Period) தான் விலங்குகள் உருவாகின என்று நினைத்து வந்தோம். ஆனால் இந்த புதிய கண்டுபிடிப்பு,விலங்கினங்கள் கேம்பிரியக் காலத்திற்கு முன்பு எடியாகார காலத்திலேயே உருவாகி இருக்கின்றன என்று கூறுகிறது. டிக்கின்சோனியாவின் பழமையான புதைபடிவம் ரஷ்யாவின் வெள்ளைக் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
![]() |
(டிக்கின்சோனியா படிவம் - விக்கிப்பீடியா) |
இந்த புதைபடிவத்தில் இருந்த கொழுப்பை (fossil deposit) மேலே குறிப்பிடப்பட்ட விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்தது. புதைபடிவமாகி போன கொழுப்பை வைத்து அவை எவ்வகை உயிரினம் என்று கண்டுபிடிப்பார்கள். ஏனெனில், ஒவ்வொரு வகை உயிரினமும் ஒவ்வொரு வகை கொழுப்பை உற்பத்தி செய்யும். எடுத்துக்காட்டாக, பச்சை பாசிகள் (green algae) stigmasteroids எனப்படும் கொழுப்பு வகையை அதிகமாக உற்பத்தி செய்யும். இலைக்கன்கள் (lichens) ergosteriods வகை கொழுப்பையும், விலங்குகள் cholesteroidsவகை கொழுப்பையும் உற்பத்தி செய்யும். விஞ்ஞானிகள் gas chromatography – mass spectrometry என்ற அறிவியல் ஆய்வு முறையை பயன்படுத்தி எந்த மாதிரி புதைபடிவ கொழுப்புகள் டிக்கின்சோனியா புதைபடிவத்தில் இருந்தது என்று ஆராய்ந்தார்கள்.
![]() |
(டிக்கின்சோனியாவின் மாதிரி படம் - விக்கிப்பீடியா) |
விஞ்ஞானிகள் முதலில் டிக்கின்சோனியா படிவத்தின் மேல் இருந்தும், கீழ் இருந்தும் மாதிரிகளை (samples) எடுத்தார்கள். இந்த மாதிரிகளை வைத்து டிக்கின்சோனியா படிவத்தை சுற்றி வேறு எந்த உயிரினங்களும் வாழ்ந்ததா என்று அறிந்து கொள்ள முடியும். டிக்கின்சோனியா படிவத்தை சுத்தி எடுக்கப்பட்ட மாதிரிகளை டிக்கின்சோனியா படிவத்தில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியோடு ஒப்பிட்டு பார்த்தார்கள். இப்படி ஒப்பிட்டு பார்க்கும் போது டிக்கின்சோனியாவின் கொழுப்போடு வேறு உயிரினங்களின் கொழுப்புகள் கலந்து இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம். டிக்கின்சோனியா படிவ மாதிரில் இருந்து வேறு உயிரனங்களின் கொழுப்புகளை கழித்துவிட்டால் டிக்கின்சோனியாவின் கொழுப்பை மட்டும் தெரிந்து கொள்ளலாம். டிக்கின்சோனியா படிவத்தை சுற்றி எடுக்கப்பட்ட மாதிரிகளில் 71.3 – 76.0% stigmasteroid மற்றும் 10.6 – 11.9% chlosteroid கொழுப்புகள் இருந்தது. இது டிக்கின்சோனியா படிவத்தை சுற்றி பச்சை பாசி இருந்திருக்கும் என்பதை காட்டுகிறது. எடியாகார கால உயிரினங்களில் பொதுவாக stigmasteroid கொழுப்பு இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
(இந்த கண்டுபிடிப்பு பற்றி விஞ்ஞானிகள் பேசுவதை கீழே உள்ள வீடியோவில் காணவும்)
டிக்கின்சோனியா படிவ மாதிரியில் 93% cholesteroid, 1.8% ergosteroid மற்றும் 5.2% stigmasteroid கொழுப்புகள் இருந்ததை ஆய்வின் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த கண்டுபிடிப்பு டிக்கின்சோனியா விலங்கு இனத்தை சேர்ந்தது என்பதை உறுதி செய்கிறது. இந்த கண்டுபிடிப்பு அறிவியல் ஆர்வலர்களுக்குள் வியப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது. வழக்கம் போல,மேலும் பல விஞ்ஞானிகள் டிக்கின்சோனியா படிவங்களை மேற்கொண்டு ஆராய்ந்து இந்த கண்டுபிடிப்பை மேம்படுத்துவார்கள். நம்மை போன்ற பாமர மக்கள் எப்போதும் தொல்பழங்கால உயிரனங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்போம்.
Comments
Post a Comment